search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழிப்புணர்வு நிகழ்ச்சி"

    • பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளை ஒருங்கிணைப்பாளர் புனிதா செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி அருகே பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர் கிளை மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பாக அணுமின் உற்பத்தி நிலையத்தில் பொறியியல் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பி.எஸ்.ஆர். கல்வி குழுமத்தின் இயக்குனர் விக்னேஸ்வரி அருண் குமார் தலைமை தாங்கினார். மின் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் முனிராஜ் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் மற்றும் கல்லூரி டீன் மாரிச்சாமி வாழ்த்தி பேசினர். சிறப்பு அழைப்பாளராக கூடங்குளம் அணுமின் நிலையம் கூடுதல் முதன்மை பொறியாளர் சுரேஷ் குமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அணு மின் நிலையங்களில் முக்கியத்துவம், அணு மின் நிலையங்களில் மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகள், கேட் தேர்வின் முக்கியத்துவம் முதலான தகவல்களை மாணவர்களிடம் விளக்கி கூறினார்.

    நிகழ்ச்சியில் மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் மின்னணு தொடர்பு மற்றும் உயிர் மருத்துவ பொறியியல் மாணவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளை ஒருங்கிணைப்பாளர் புனிதா செய்திருந்தார். இணை பேராசிரியர் அருணா நன்றி கூறினார்.

    • றப்பு விருந்தினராக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை காவல் ஆய்வாளர் சசிலேகா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
    • ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை தலைமை காவலர்கள் ராஜா, வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2, திருப்பூர் தெற்கு காவல் நிலையம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை ஆகியவை இணைந்து திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் ஊழல் வேண்டாம் என்று சொல்லுங்கள் என்ற மையகருத்தை வலியுறுத்தி லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். தெற்கு காவல் உதவி ஆய்வாளர் ரஜினிகாந்த் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை காவல் ஆய்வாளர் சசிலேகா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    காவல் ஆய்வாளர் பேசுகையில், சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஒரு வாரம் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.லஞ்சம் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கிறது. லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம். பெருகி வரும் ஊழலை தடுக்க 0421-2482816, 8300046708 என்ற எண்களுக்கு தகவல் தர வேண்டும், அவ்வாறு தகவல் தருபவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்று பேசினார்.

    ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை தலைமை காவலர்கள் ராஜா, வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். பிறகு, மாணவ செயலர்கள் சுந்தரம், ராஜபிரபு, விஜய், தினேஷ் கண்ணன், செர்லின் ஆகியோர் தலைமையில் 60க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு நடனமாடியும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • அரசு மேல்நிலைப் பள்ளியில் ஈரோடு இருப்புப்பாதை போலீஸ் நிலையம் மற்றும் ரெயில்வே பாதுகாப்புபடை சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • ஈரோடு இருப்புப்பாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமை வகித்து பேசினார்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி ஆர்.எஸ். நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஈரோடு இருப்புப்பாதை போலீஸ் நிலையம் மற்றும் ரெயில்வே பாதுகாப்புபடை சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    ஈரோடு இருப்புப்பாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமை வகித்து பேசினார். ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர்கள் நிஷாந்த், சுபாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தண்டவாள பகுதியில் மாணவர்கள் விளையாட வேண்டாம். உரிய பாதையை பயன்படுத்த வேண்டும். தண்டவாள பகுதியை தாண்டி செல்ல வேண்டாம். சிக்னலை மதித்து நடக்க வேண்டும். செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க கூடாது. தண்டவாளப் பகுதியில் கற்கள் வைத்து விளையாடுவதும், ஓடும் ரயில் மீது கற்களை எரிந்து விளையாடுவதும் கூடாது. அது தண்டனைக்குரிய குற்றம் என எடுத்துக் கூறி மாணவர்களுடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் விஜய் ஆனந்தன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது
    • விழிப்புணர்வு நாடகம் மற்றும் பொம்மலாட்டம்

    ராணிப்பேட்டை:

    வாலாஜாபேட்டையில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் உலக மனநல தினத்தை முன்னிட்டு மாவட்ட மனநல பிரிவு மற்றும் சமூக அமைப்புகள், நர்சிங் பயிற்சி கல்லூரிகள் ஆகியவை இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் விஜயமுரளி, மருத்துவமனை கண்காணிப்பாளர் உஷாநந்தினி, அலுவலக கண்காணிப்பாளர் சிவகுமார், மனநல மருத்துவர்கள் நர்மதா, கோகுலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மனநலத்தை பேணிகாப்பது போதை பழக்கங்கள் மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது குறித்து கல்லூரி மாணவிகள் நடத்திய விழிப்புணர்வு நாடகம் மற்றும் பொம்மலாட்டம் நடைபெற்றது.

    இதில் டாக்டர்கள், மேல்விஷாரம் தி நேஷனல் வெல்பர் அசோசியேஷன் நிர்வாகிகள், மருத்துவமனை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவரும் வக்கீலுமான ஜி.கே.பிரகாஷ் கலந்து கொண்டு விளக்கம் அளித்தார்.
    • நிகழ்ச்சியில் முதல்வர் தங்கராஜன், தாளாளர் கீதா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ராயல் ஏஞ்சல் டுடோரியல் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு மற்றும் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவரும் வக்கீலுமான ஜி.கே.பிரகாஷ் கலந்து கொண்டு விளக்கம் அளித்தார்.

    இதில் போக்குவரத்து விதிகள், மனித உரிமைகள், பொதுவான சட்ட விதிகள் போன்றவை விளக்கி கூறப்பட்டது. நிகழ்ச்சியில் முதல்வர் தங்கராஜன், தாளாளர் கீதா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் வில்லேஜ் விசிலன்ஸ் கமிட்டி கலந்தாய்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஊராட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    டி.என்.பாளையம்:

    பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் 3 பேரூராட்சி மற்றும் 8 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கு ஊரில் நடக்கும் குற்ற நிகழ்வு குறித்து "வில்லேஜ் விசிலன்ஸ் கமிட்டி" கலந்தாய்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி பங்களாப்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வாணிப்புத்தூர், கே.என்.பாளையம், பெரிய கொடிவேரி பேரூராட்சிகள் மற்றும் அரக்கன்கோட்டை, புஞ்சை துறையம்பாளையம், கொண்டையம்பாளையம், கணக்கம்பாளையம், பெருமுகை உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த வேண்டும். புதிய நபர்களின் நடமாட்டம் இருந்தாலோ, சந்தேகத்தின் பேரில் புதிய நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டாலோ சம்பந்த ப்பட்ட போலீஸ் நிலை யத்தில் தகவல் கொடுக்கு மாறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேரூராட்சி, ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்க ளுக்கு போலீசார் அறிவுறுத்தி பேசினர்.

    தடை செய்யப்பட்ட புகையிலை, கஞ்சா மற்றும் சட்ட விரோதமாக மதுபான பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருப்போர் குறித்து தகவல் தெரியும் பட்சத்தில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ள ப்பட்டது. மது போதையில் பொதுமக்களிடத்திலோ, பொது இடங்களிலோ இடையூறு மற்றும் தகராறில் ஈடுபடும் நபர்கள் குறித்து போலீசில் தலைவர்கள் தகவல் கொடுக்க வேண்டுமாறு நிகழ்ச்சியில் போலிசார் பேசினர்.

    இந்த குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது பங்களாப்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், தனிப்பிரிவு போலீசார் உடன் இருந்தனர்.

    • கமுதி அருகே இயற்கை பேரிடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்தது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பூக்குளம் கிராமத்தில் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இயற்கை பேரிடர் விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. தலைமை ஆசிரியை செல்வின் சாக்ரோஸ் முன்னிலை வகித்தார். கமுதி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் இயற்கை பேரிடர் கள் குறித்தும், மாணவ- மாணவிகள் தங்களை எப்படி தற்காத்து கொள்ள வேண்டும், பொதுமக்களை எப்படி காப்பாற்ற வேண்டும், எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பது குறித்தும் விளக்கமளித்தனர்.

    இதில் தீயணைப்பு வீரர்கள் உத்தண்ட சாமி, நாகச்சந்திரன், காந்தி, தினேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதே போல் சின்ன உடப்பங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளியிலும் மாணவர்களுக்கு பேரிடர் விழிப்புணர்வு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    • காளீஸ்வரி கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகப்பாண்டி செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு மன்றத்தின் சார்பாக குழந்தை திருமண தடை சட்டம் குறித்த விழிப்புணர்வு சிறப்புரை நிகழ்ச்சி நடந்தது. வணிகவியல் துறை உதவி பேராசிரியர் கீதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 2-ம் ஆண்டு மாணவர் ராகவன் வரவேற்றார். இதில் குழந்தை திருமண தடைச்சட்டம் குறித்த விளக்கமும், குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. முடிவில் 2ம் ஆண்டு மாணவர் சிவசுப்பரமணியன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகப்பாண்டி செய்திருந்தார். 

    • கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பு
    • சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    கடலூர், செப்.20-

    கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடலூர் மாவட்டத்தில் 24 ந்தேதி போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நம்ம ஸ்ட்ரீட் நிகழ்ச்சி (ஆடல் பாடல் விளையாட்டு விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள்) காலை 6 மணி முதல் 10 மணி வரை சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடைபெற உள்ளது.

    எனவே, மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள், சமூக நல அமைப்பினர், தன்னார்வலர்கள் மற்றும் அனைத்து பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு நிகழ்ச்சியை கண்டு களிக்கவும் கடலூர் மாவ ட்டத்தை போதை பொருள் இல்லா மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயலாற்றவும் கேட்டுக்கொள்ள ப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • அவிநாசி அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆபத்து கால முதலுதவி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பாதிக்கப்பட்டவா்களை பாதுகாப்பான முறையில் மீட்பது குறித்து செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.

    அவிநாசி,

    உலக முதலுதவி தினத்தையொட்டி அவிநாசி அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆபத்து கால முதலுதவி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்திய மருத்துவக்கழகத்தின்கீழ் இயங்கும் 108 அவசர ஊா்தி இயக்குநரகம், தனியாா் அவசர ஊா்திகள் சங்கம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், யூத் ரோட்டரி சங்க பொறுப்பாளா் ராஜ்குமாா், 108 அவசர ஊா்தி ஊழியா்கள் ராஜேஷ், மனோஜ், மோகன்ராஜ் ஆகியோா் முதலுதவி குறித்த செயல்முறை விளக்கமளித்தனா்.

    இதில், இயற்கை பேரிடரில் பாதிக்கப்படுபவா்களை எவ்வாறு மீட்பது, முதலுதவி சிகிச்சை அளிப்பது, எலும்பு முறிவு, மாரடைப்பு, மூச்சு திணறல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவா்களை பாதுகாப்பான முறையில் மீட்பது குறித்து செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.

    • மனநலன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தமிழியல் துறை சங்க பலகை இலக்கிய மன்றம் சார்பில் மனம் நிரல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கி உடல்நலம், மனநலம் குறித்து பேசினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

    சிவகாசி அரசு மருத்துவமனை ஆலோசகர் சங்கர், மாவட்ட மனநல மருத்துவ திட்ட அதிகாரி நித்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். மனநல மருத்துவர் இளையராஜா மனதை பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும், மனகட்டுப்பாடு குறித்தும் பேசினார்.

    முன்னதாக மாணவி அங்காள பரமேஸ்வரி வரவேற்றார். மாணவி மாலதி நன்றி கூறினார். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    • 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பேசினார்
    • மாணவ-மாணவிகள் உறுதியேற்றனர்

    ஊட்டி,

    பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஊட்டி ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கவியல் கல்லூரியில் மாணவர்கள் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் தனபால் தலைமை தாங்கினார். துணை முதல்வர் அருண், செயலர்கள் கவுசல்யா, முருகப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

    நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் தனபால் பேசுகையில், 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது ஜனநாயக கடமை. பணம் வாங்காமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என பேசினார். தொடர்ந்து நூறு சதவீதம் வாக்களிப்போம், எங்கள் வாக்குகள் விற்பனைக்கு அல்ல என்று மாணவ-மாணவிகள் உறுதிமொழியேற்றனர்.

    ×